கல்விபுரட்சிக்கு வித்திட்ட வேலூர் சிறை - TESTFKRISHNAGIRI

1857 வேலூர் சிப்பாய் புரட்சி எப்படி நமது சுதந்திரபோராட்ட உணர்வை தூண்டியதோ அதேப்போல்
தமிழக கல்விப்புரட்சிக்கும் வேலூர் வித்திட்டது.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1930 ஆம் ஆண்டு நாட்டில் ,   நல்ல திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு.

இந்த ஆண்டில்தான் காந்தியடிகளால் உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டதுஇந்த அஹிம்சை போர் நாட்டின் அனைத்து பிரிவு மக்களிடையே போராட்ட உணர்வை தூண்டும்      விதத்தில்     அமைந்திருந்தது.

அப்போராட்டத்தில் ஈடுபட்ட படித்த இளைஞர்களில் பலர்  ஆசிரியர்களானார்கள்


 சுதந்திரப்போரில் ஆசிரியர்கள் பங்கு

மாஸ்டர் அவர்கள் 1928ம் ஆண்டிலேயே untrained.tr  ஆவார்.  அதன்   பின்னர் 1932   ஆண்டில்  trained tr  ஆனார்.
 மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் 1936ல் கோழிக்கோடு வட்டத்தில் SITU    தென்னிந்திய  ஆசிரியர் இயக்கத்தின் தலைவரானார்.


 "இந்திய சுதந்திரப்போரில்  ஆசிரியர்கள் பங்கேற்கலாமா"  என்ற கேள்விக்கு 1938 ம் ஆண்டு கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள (சென்னைமாகாணம்)  ஒற்றப்பாலத்தில் கூட்டப்பட்ட ஆசிரியர்கள் மாநாட்டில்  தலைமை ஏற்ற மாஸ்டர் இராமுண்ணி அவர்கள்
"இந்திய சுதந்திரப்போரில் தீரமுடன்  ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்"
என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார்.


சுதந்திர போராட்டம் ஆசிரியர்களிடையே ஏற்படுத்திய தாக்கம்


மாநாட்டில் கொண்டுவரப்பட்டதீர்மாணத்தின்படி சுதந்திர போராட்டத்தில்அனைத்து ஆசிரியர்களையும் பங்கு  பெற செய்தார்.அவ்வாறு பங்குபெற்ற ஆசிரியர்கள்  கோழிக்கோடுவள்ளுவ நாடுபொள்ளாணி  மற்றும் பாலக்காடு பகுதியில்  தங்கள் துறையில் நடைபெற்று  வந்த    எதேச்சதிகாரத்தையும் ,  அநீதியையும் கண்டு ஆத்திரமுற்றனர்நாட்டு   விடுதலை இயக்கத்தினால் உணர்ச்சியூட்டப்பட்ட அந்த     ஆசிரியர்களின்  தீயாய் எரிந்த  முயற்சியே மாஸ்டர் இராமுண்ணி அவர்களால்   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி என்ற இயக்கம்       தொடங்க ஊன்று கோலாக இருந்தது.


மாஸ்டரின் சிறை வாசம் 

அவர் ஆசிரியர்களை ஒன்று திரட்டி 1941ம் ஆண்டு அவர் நடத்திய CARE Not CERTIFICATE  இயக்கம் மற்றும் அடிப்படை ஊதிய மாற்றத்திற்காக அவர் நடத்திய போராட்டங்களைக் கண்ட அன்றைய அரசு இந்த ஆசிரியர் இயக்கம் கம்யூனிஸ்ட் சார்பு இயக்கம் எனக்கூறி மாஸ்டர் அவர்களை பாதுகாப்பு கைதியாக்கி   வேலூர் சிறையில் அடைத்ததுஇரண்டு ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் 1942ல் விடுதலையானார்.
அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக  இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்"2ம் உலக போர் நிதிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்"  என்பதற்காக கைது செய்யப்பட்டு அதே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

அன்று அடிப்படைக்கல்வி என்ற வகையில் 6 ஆம் வகுப்பு வரை படித்த காமராசர் அவர்களுக்கு மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் வேலுர் சிறையில் ஆங்கிலப்பாடம் நடத்தி பெருந்தலைவர் காமராசர் அவர்கள்   ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அளவுக்கு மாஸ்டரின் பயிற்சி உதவியாக இருந்தது   என்பது  இருவரின்சிறை வாழ்விலும் மறக்க முடியாத பக்கங்கள் ஆகும்.
இந்த சிறையில் தான் காமராசர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க கூடும்.
 

சிறையில் எற்பட்ட நட்பும் காமராசரின் நிர்வாக திறமையும்  கண்ட மாஸ்டர் பின்நாளில் அவர் பெரும் பதவிக்கு வருவார் என்பதை அப்போதே மாஸ்டர் அறிந்திருந்தார் அதலால்  சிறையிலே கல்வியால் மட்டுமே இந்த நாடு மேம்பாடு அடைய இயலும் என்பதை காமராசரிடம் அடிக்கடி கூறிவந்தார் .அவரின் தொலைநோக்கு-

இவை எல்லாம் தான்  காமராசரை முதல்வராக்க நமது  இராமுண்ணி   அவர்கள் நமது ஆசிரியர்களுடன் சைக்கிள் பேரணி நடத்தினாரா  என்கிற எண்ணம் நம்மிடையே எழத்தான் செய்கிறது.

மாஸ்டர் இராமுண்ணி இறந்த போது காமராசர் மற்றும் நெ.து .சுந்தரவடிவேல் ஆகியோர் வந்திருந்து  மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடனான சிறை நட்பு இறுதி வரை  தொடர்ந்ததை பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மாஸ்டர் இராமுண்ணி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அங்கு குறிப்பிட்டு பேசினார் என்பதையும் மறைக்கமுடியாத மறுக்க முடியாத உண்மைகள். 
அன்புடன்  அருண் பிரகாஷ் ராஜ் & மதிவாணன்  உடன் தமிழ் செல்வன் 
                      செயலர் கிருஷ்ணகிரி வட்டாரம் 
இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும்.
என் முத்தோர்  சொல்வழி.............. எழுத்தாக்கம்

1.காமராசரை முதல்வராக்கியதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முக்கிய பங்கு 

2.மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ?












Comments

Popular posts from this blog

மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI