மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI

பேரியக்கத்தின் வரலாறு:
 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாவது மாநாடு1952 சென்னையில் நடைபெற்றது. 

இந்த மாநாடு மதிப்பிற்குரிய
 பி. வரதராஜுலு அவர்களின் தலைமையில் நடந்தது. சரி யார் இவர் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றலாம்.

* பி.வரதராஜுலு என்பவர் அன்றைய காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்தவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். மகாத்மா காந்தியடிகள் சேலம் வந்தபோது (1920 மற்றும் 1921ம் ஆண்டு) இவருடைய வீட்டில் தான் தங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
ஏனெனில் மதிப்பிற்குரிய
 பி. வரதராஜுலு அவர்களின்
செல்வாக்கு அப்போதய காங்கிரஸ் கட்சியில் மேலோங்கி இருந்தது.
மேலும் சேலம் சட்டமன்ற உறுப்பினராக மற்றும் சட்டமேலவை
உறுப்பினராகவும் இருந்தவர்.


 இந்த வரதராஜிலுதான்  காமராசரை முதல்வராக முன்மொழிந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் தமிழ்நாடு பத்திரிகையின் நிறுவனர் மற்றும் அதன் ஆசிரியர்  ஆவார்.
நமது மாநாட்டை ஏற்பாடு செய்த  பேரியக்கத்தின் நிறுவனர் 
மாஸ்டர் இராமுண்ணியும் ஓர் தீவிர சுதந்திரபோராட்ட வீரர் என்பது கவனிக்கத்தக்கது.

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

விளக்கம்:

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

என்பதற்கேற்ப  மாநாட்டினை மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் மதிப்பிற்குரிய  பி. வரதராஜுலு அவர்களின் தலைமையில் நடந்தினார். அந்த மாநாட்டில் கர்மவீரர் காமராசர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் நமது கிருஷ்ணகிரியை சேர்ந்த அ.ந.இராமானுஜம் உள்ளிட்ட சில  ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சென்னை மாநாட்டுக்கு சென்று வந்த பின் இங்குள்ள ஆசிரியர்களுக்கு அந்த மாநாட்டை தொடர்ந்து நமது ஆசிரியர்களுக்கு அம்மாநாட்டின் வழியாக பெறப்பட்ட பயன்களை எடுத்து கூறி நமது பேரியக்கத்தை இங்கு வலுப்படுத்தினர்.

மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடன் மாநிலத்தின் மிக முக்கியமான பொறுப்பாளர்களான வெள்ளைச்சாமி. இராமையாதேவர் , எல்லண்ணா, உசேன்  ஆகியோர் நமது மாஸ்டருக்கு உறுதுணையாக இருந்து இம்மாநாட்டினை சிறப்பாக வெற்றிகரமாக நடத்தினர்.




இந்த மாநாடு 1952 ஜனவரியில் நடந்தது அதன் பலன்கள்

1951 ல் சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமைக்காக இயக்கம்  வழக்கு தொடுத்திருந்தது.

வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் ஆசிரியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள தடை இல்லை என்று அறிவித்தது. ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் சான்றுகள் திரும்ப அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறியது.

இம்மாநாட்டிற்கு பிறகு

*ஆசிரியர் சங்கங்கள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியது.
மேலும்,போராட்டத்தினை தூண்டும் வகையில் இருந்ததாக கூறி ( 1949 ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநாட்டிற்கு பிறகு )ரத்து செய்யப்பட்ட மாஸ்டர் ராமுண்ணி அவர்கள் உள்ளிட்ட பல  ஆசிரியர்களின் சான்றுகள் திரும்ப அளித்தல்
 என்ற கொள்கை முடிவை அரசு எடுத்தது.

• Higher Grade ஆசிரியருக்கு 27-30 ரூபாய் எனவும்.
Secondary Grade ஆசிரியருக்கு 37-1-45 எனவும் ஊதியம் உயர்த்த வழி செய்ததும் இம்மாநாடு தான் என்று  பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

இதற்கு பின் நடந்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து நடந்த சைக்கில் பேரணிக்கு அடுத்தநாள் காமராசர் முதல்வரானார் என்பது குறிப்பிட தக்கது. இராமுண்ணியின் தொலைநோக்கு திட்டமிடலுக்கு இது மிகச்சிறந்த உதாரணம். 
மாஸ்டர் 
மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ?
தொடரும் ………
 

அன்புடன்  அருண் பிரகாஷ் ராஜ் உடன் தமிழ் செல்வன் 
                      செயலர் கிருஷ்ணகிரி வட்டாரம் 
இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும்.
என் முத்தோர்  சொல்வழி.............. எழுத்தாக்கம்
காமராசரை முதல்வராக்கியதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முக்கிய பங்கு 

9787536970 தங்கள் கருத்துக்களை கூற


Comments