காமராசரை முதவராக்கியதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி அசிரியர் கூட்டணியின் பங்கு TESTFKRISHNAGIRI

 
கிருஷ்ணகிரி  இயக்க வரலாறு -1
 கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் இயக்கம் வலுவடையவும் தனித்தனியாக இருந்த ஆசிரயர்களையும் ஒன்றிணைக்க வலுவான காரணம் இருந்தது.
1952ல் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு பின்னர் மாநில அரசு சங்கச் செயல்பட விதித்திருந்த தடையை நீங்கியது ஒருகாரணம். அதற்கு முன்னர் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யுமளவுக்கு ஜில்லாபோர்டுகளும் . அரசாங்கமும் இருந்தது குறிப்பிடதக்கது

1953ஆம் ஆண்டு ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி நேரத்தை குறைத்தும் ஆசிரியர்களின் கல்விகற்பிக்கும் நேரத்தை இரண்டுமடங்காக்கும் நிலையும் 6000 பள்ளிகளுக்கு முடுவிழா நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்ட கல்வித்துறையை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலைக்கு ஆசிரயர்கள் தள்ளப்பட்டனர். 

அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி முதல் 8 மணி  நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.

         ராஜாஜியின் அறிக்கை பின்வருவனவற்றை சுட்டிக்காட்டியதும் காரணம்  பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணிநேரங்கள் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். இவ்வாறான அறிக்கைகள் புதிய ஆசிரியர் நியமணமும் இல்லை என்றானதால் ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே

         அப்போதய மாநிலத் துணை தலைவர் நல்லிபாளையம் ராமசாமி ரெட்டியார்  சைக்கில் பேரணி நாமக்கல்லில் இருந்து தொடங்கி கிருஷ்ணகிரி வழியாக சென்றது அப்போது கிருஷ்ணகிரி ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர் அவர்களுக்கு உணவும் வழங்கி தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். அப்போது தான் இப்பகுதியில் இத்தனை ஆசிரியர்கள் இருப்பதை காணநேர்ந்து இங்கு இயக்கத்தை வலுவேற்ற ஆசியர்கள் முடிவு செய்தனர் ஜே.தனராஜ். லட்சுமிபதி . கிருஷ்ணாஜி ஆகியோர்  தலைமையில் இந்த வரவேற்பும் ஒன்று கூடுதலும் நடைபெற்றது.

இந்த சைக்கில் பேரணி பெரும்பேரணியாக தமிழகபட்டி தொட்டியையும் பேசவைத்தது.இதை அண்ணாத்துரையும் அவரது இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர். காங்கிரசிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.இந்த நிலையில் சைக்கில் பேரணி சென்னை அதிர சென்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது அதில் கட்சித்தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இதன் விளைவு அடுத்தநாள் சட்டமன்றத்தில் கடும் வாக்குவாதம் ராஜாஜி பதவிவிலகல். குலக்கல்வித்திட்டம் கைவிடப்பட்டு. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாபெரும் சைக்கில்பேரணி தமிழகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் எதிர்கட்சிகள் அதை சரியாக பயண்படுத்தியதன் விளைவாக நாம் கொண்டாடும் முதல்வர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் முதல்வரானார். (ஏப்ரல் 13, 1954)

                         அன்புடன் தமிழ் செல்வன் 
                      செயலர் கிருஷ்ணகிரி வட்டாரம் 
இந்த இயக்கம் வாழ்வதிலே இருப்பதெங்கள் வாழ்வாகும்.
என் முத்தோ;U  சொல்வழி.............. எழுத்தாக்கம்


Comments

Post a Comment

Popular posts from this blog

மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI