மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI
பேரியக்கத்தின் வரலாறு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாவது மாநாடு1952 சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாடு மதிப்பிற்குரிய பி. வரதராஜுலு அவர்களின் தலைமையில் நடந்தது. சரி யார் இவர் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றலாம். * பி.வரதராஜுலு என்பவர் அன்றைய காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்தவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். மகாத்மா காந்தியடிகள் சேலம் வந்தபோது (1920 மற்றும் 1921ம் ஆண்டு) இவருடைய வீட்டில் தான் தங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் மதிப்பிற்குரிய பி. வரதராஜுலு அவர்களின் செல்வாக்கு அப்போதய காங்கிரஸ் கட்சியில் மேலோங்கி இருந்தது. மேலும் சேலம் சட்டமன்ற உறுப்பினராக மற்றும் சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்தவர். இந்த வரதராஜிலுதான் காமராசரை முதல்வராக முன்மொழிந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் தமிழ்நாடு பத்திரிகையின் நிறுவனர் மற்றும் அதன் ஆசிரியர் ஆவார். நமது மாநாட்டை ஏற்பாடு செய்த பேரியக்கத்தின் நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணியும் ஓர் தீவிர சுதந்திரபோராட்ட வீரர் என்பது கவனிக்கத்தக்க...
Comments
Post a Comment