Posts

Showing posts from March, 2020

மாஸ்டர் மாற்றத்தை எதிர்பார்த்தே மாநாட்டை நடத்தினாரா ? TESTFKRISHNAGIRI

Image
பேரியக்கத்தின் வரலாறு:  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாவது மாநாடு1952 சென்னையில் நடைபெற்றது.  இந்த மாநாடு மதிப்பிற்குரிய  பி. வரதராஜுலு அவர்களின் தலைமையில் நடந்தது. சரி யார் இவர் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றலாம். * பி.வரதராஜுலு என்பவர் அன்றைய காங்கிரஸ் இயக்கத்தை சார்ந்தவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர். மகாத்மா காந்தியடிகள் சேலம் வந்தபோது (1920 மற்றும் 1921ம் ஆண்டு) இவருடைய வீட்டில் தான் தங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   ஏனெனில் மதிப்பிற்குரிய  பி. வரதராஜுலு அவர்களின் செல்வாக்கு அப்போதய காங்கிரஸ் கட்சியில் மேலோங்கி இருந்தது. மேலும் சேலம் சட்டமன்ற உறுப்பினராக மற்றும் சட்டமேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.  இந்த வரதராஜிலுதான்  காமராசரை முதல்வராக  முன்மொழிந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவர் தமிழ்நாடு பத்திரிகையின் நிறுவனர் மற்றும் அதன் ஆசிரியர்  ஆவார். நமது மாநாட்டை ஏற்பாடு செய்த  பேரியக்கத்தின் நிறுவனர்  மாஸ்டர் இராமுண்ணியும் ஓர் தீவிர சுதந்திரபோராட்ட வீரர் என்பது கவனிக்கத்தக்க...

காமராசரை முதவராக்கியதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி அசிரியர் கூட்டணியின் பங்கு TESTFKRISHNAGIRI

Image
  கிருஷ்ணகிரி  இயக்க வரலாறு -1   கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் இயக்கம் வலுவடையவும் தனித்தனியாக இருந்த ஆசிரயர்களையும் ஒன்றிணைக்க வலுவான காரணம் இருந்தது. 1952ல் உயர்நீதி மன்ற தீர்ப்புக்கு பின்னர் மாநில அரசு சங்கச் செயல்பட விதித்திருந்த தடையை நீங்கியது ஒருகாரணம். அதற்கு முன்னர் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யுமளவுக்கு ஜில்லாபோர்டுகளும் . அரசாங்கமும் இருந்தது குறிப்பிடதக்கது 1953 ஆம் ஆண்டு ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . ஏழை எளிய மாணவர்களின் கல்வி நேரத்தை குறைத்தும் ஆசிரியர்களின் கல்விகற்பிக்கும் நேரத்தை இரண்டுமடங்காக்கும் நிலையும் 6000 பள்ளிகளுக்கு முடுவிழா நடத்தும் நிலைக்கும் தள்ளப்பட்ட கல்வித்துறையை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலைக்கு ஆசிரயர்கள் தள்ளப்பட்டனர்.  அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது . சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை . ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி முதல் 8 மணி  நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது . ஐந்துநாள் வேலை ஆ...